செல்போன் எண் இல்லாமல், ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதியை டுவிட்டர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது…!

120
Advertisement

டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் எலான் மஸ்க், தற்போது புதிய அம்சம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதியை டுவிட்டர் நிறுவனம் கொண்டு வர உள்ளது.  இந்த புதிய வசதியை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், டுவிட்டர் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், ஊழியர்களை ஓவர் டைம் வேலை செய்யுமாறு அறிவுறுத்திய அவர், ட்விட்டர் திவாலாகிவிடும் என்றும், வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி ட்விட்டர் ட்வீட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சில பிரத்யேக கணக்குகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் வசதியை அனைவருக்கும் வழங்குவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். இதற்காக பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தினார். அதாவது ட்விட்டர் நிறுவனம், மாதம் 8 டாலர் செலுத்தினால் மட்டுமே அனைவருக்கும் ப்ளூ டிக் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த வசதியை பயன்படுத்தி பலர் சந்தா கட்டணம் செலுத்தி ப்ளூ-டிக் வசதியை வாங்கினர். இதற்கிடையில், பிரபலங்கள் யாரும் அசையவில்லை. இதனால் சந்தா கட்டணம் செலுத்தாத பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களிடம் இருந்து ப்ளூ டிக் வசதியை கடந்த மாதம் 20ம் தேதி ட்விட்டர் பறித்தது.