என்னது டிரம்ப் பாஜகவில் சேரப் போகிறாரா? பங்கமாக கலாய்த்த MP!

148
Advertisement

2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஆபாச நடிகை Stormy Daniels உடனான தொடர்பு பற்றி அவர் வெளியே பேசாமல் இருக்க, 1300 டாலர்களை தேர்தல் பரப்புரை நிதியில் இருந்து டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது.

டிரம்ப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, கைதாவதில் இருந்து தப்பிக்க டிரம்ப் பாஜகவில் இணைவது போன்ற கற்பனை புகைப்படத்தை பகிர்ந்து நக்கல் அடித்து இருந்தார்.

இந்த ட்வீட் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கிடையே, Manhattan நீதிமன்றத்தில் சரணடைந்த டிரம்ப் கைது செய்யப்பட்டாலும் ஆகஸ்ட் 8 வரை மேல்முறையீட்டிற்கான கால அவகாசம் பெற்று நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார். அடுத்த கட்ட விசாரணைக்காக டிரம்ப் டிசம்பர் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.