திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி :

230

டெல்லியில் நடந்த குற்ற சம்பவம் தொடர்புடையதாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு முகாமில் நேரில் சென்று பார்வையிட்டு சோதனை குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

டெல்லியில் நடந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி தர்மராஜ் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட சிறப்பு படையினருடன் சோதனை நடைபெற்று வருகிறது, இரண்டு மணி நேரத்தில் சோதனை நிறைவுபெறும். அதன்பின்னர் யார் யார் மற்றும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடந்தது என்பது குறித்து சோதனை முடிந்து தெரிவிப்பதாக தெரிவித்தார்..