ஆண் குழந்தை பெற்றெடுத்த திருநம்பி

425
Advertisement

https://www.instagram.com/p/CVfySJZvEls/?utm_source=ig_web_copy_link

திருநம்பி ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் 37 வயதான பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ், தனது கணவரான மாலிக் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தை பெற்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

காரணம், அவர் திருநம்பி என்பதுதான்.
2011 ஆம் ஆண்டில் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை உணரத் தொடங்கியுள்ளார் பென்னட். அதனால், 2014 ஆம் ஆண்டில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தொடங்கி முழுமையான திருநங்கையாக மாறினார்.

5 ஆயிரம் டாலர் செலவில் உடலின் மேல்பாகத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மார்பகம் அகற்றப்பட்டது.

அவரது தாடி, தட்டையான மார்பு காரணமாக ஆவணங்களில் ஆண் என்றே குறிக்கப்பட்டுள்ளார். என்றாலும், மக்கள் அவரை Madam, Mam என்றே அழைக்கின்றனராம். ஆனால், தன்னை ஆணாகவே கருகிறார் பென்னட்.

நான் என் சொந்தக் குழந்தையை உருவாக்கிய அப்பா என்று சொல்வதைவிட, வலிமையானது எதுவுமில்லை என்கிறார் பென்னட்.

குழந்தை பிறந்து ஓராண்டு ஆன நிலையில், தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றனர் தாயும் சேயும்.

உலகம் முழுவதும் பெண்களுக்கானதாகவே உள்ள தாய்மை நிலையை மாற்றியுள்ளார் திருநம்பி பென்னட்.