Wednesday, December 11, 2024

குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள
வேண்டிய விஷயங்கள்

  1. வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக மாற்றக்கூடிய
    குணங்களைக் குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய
    வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
    குழப்பங்களுக்கு இடம்கொடுக்காமல் மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும்
    வைத்துக்கொள்ளலாம்.
  2. குழந்தைகள் தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.
  3. அவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு மிகுந்திருக்கும். வேடிக்கையான சுபாவத்தைக்
    கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் அப்படியில்லை. தாங்கள் விரும்பும் விஷயங்களை
    அரிதாகவே செய்வார்கள். ஏதாவதொரு நிர்பந்தத்துக்கு உள்ளாகி, கட்டாயத்தில்பேரில்
    செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இது நெருக்கடிக்கும் மன அழுத்தத்துக்கும்
    உள்ளாக்கும். இதற்கு இடம்கொடாமல் குழந்தைகளைப்போல் விரும்பும் விஷயங்களைச்
    செய்வதற்குப் பெரியவர்கள் முயற்சிசெய்ய வேண்டும்.
  4. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ, என்ன நினைப்பார்களோ என்று குழந்தைகள்
    கவலைப்படுவதில்லை. ஆனால், பெரியவர்கள் மற்றவர்களை மனதில் வைத்துக்கொண்டு
    தான் தங்கள் செயல்களைச் செய்வார்கள். அவர்கள் தங்களின் விருப்பங்களை ஒதுக்கிவைத்து
    விட்டு மற்றவர்களின் ஆலோசனைப்படியே செயல்படுவார்கள். குழந்தைகள் இதற்கு இடம்
    கொடுப்பதில்லை. தாங்கள் விரும்பியபடியே செய்துமுடித்து மனநிறைவு அடைவார்கள்.
  5. குழந்தைகளிடம் நேர்மை குடிகொண்டிருக்கும். அவர்களின் மனம் குழப்பமின்றித் தெளிவாக
    இருக்கும். அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்வார்கள்.
    அந்தப் பதில் நேர்மையாகவும் சரியாகவும் இருக்கும். குழந்தைகளைப்போல் வாழ்க்கையில் கொஞ்சம்
    நேர்மையாக இருக்கப் பெரியவர்கள் முயலவேண்டும்.
  6. பெரியவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிசெய்வார்கள். அதனால் அவர்களிடம்
    மகிழ்ச்சி தொலைந்து போயிருக்கும். அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் புன்னகையை உதிர்ப்பார்கள்.
    குழந்தைகளின் உள்ளமும் முகமும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும்.
  7. குழந்தைகள் எளிதில் திருப்தி அடைந்துவிடுவார்கள். சின்னச்சின்ன விஷயங்களில்கூட
    மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்வார்கள். ஆனால், அநேகப் பெரியவர்களிடம் எதிர்பார்ப்புகள்
    இருந்துகொண்டே இருக்கும். ஒரு காரியத்தைச் செய்துமுடித்து மகிழ்ச்சி அடைந்தாலுங்கூட இன்னும்
    சிறப்பாகச் செய்திருக்கலாமே என எளிதில் திருப்தி அடையமாட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையையும்
    உணரமாட்டார்கள்.
  8. குழந்தைகள் புதிதாக ஏதேனும் ஒன்றைக் காணும்போதெல்லாம் அறிந்துகொள்ளும்வரை
    ஓயமாட்டார்கள். அறிந்துகொள்ளும்வரை உற்சாகத்துடன் செயல்படவும் செய்வார்கள். ஆனால்,
    பெரியவர்கள் எந்தவொரு செயலையும் ஆர்வமுடன் தொடங்குவார்கள். தொடக்கத்தில் இருக்கும்
    ஆர்வமும் உற்சாகமும் நாளாக நாளாகக் குறையத் தொடங்கிவிடும்.
  9. குழந்தைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்களிடம்
    எதிர்காலம் பற்றிய கவலை எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால், பெரும்பாலான பெரியவர்கள்
    எதிர்காலம் அதனைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம்கொள்வார்கள்.
  10. அதுபற்றிய சிந்தனையில் ஆழ்ந்து நிகழ்காலத்தை வீணாக்கிவிடுகின்றனர். வாழ்க்கையில்
    கடந்துபோகும் தருணங்கள் எதுவும் திரும்ப வராது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரியவர்கள்
    தவறிவிடுகிறார்கள், மறந்துவிடுகிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அதனால் குழந்தைகளிடமிருந்து
    கற்றுக்கொள்ளத் தவறாதீர்கள்.
Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!