திருவள்ளூர்: போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் – சி.பஸ்.கல்யாண்

284

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பஸ்.கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பஸ்.கல்யாணன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடம் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும் என அறிவுறுத்தினார். மேலும் போதை பொருள் குறித்த தகவல் தெரிந்தால் தயங்காமல் 6379904848 என்ற எண்ணுக்கு தகவல் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் அளிப்பவர்கள் குறித்து ரகசிங்கள் காக்கப்படும் என தெரிவித்தார்