உயிருக்கே உலை வைக்கும் Tiktok

249
Advertisement

தன்னுடைய பயனர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் Tiktokஇன் செயல்பாடு அவ்வப்போது கண்டனத்திற்கு உள்ளாகி, இந்தியா உட்பட பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அண்மையில் வெளியாகும் tiktok challengeகளால் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் உயிரிழந்துள்ள அவலம் அரங்கேறி வருகிறது.

தன்னைத் தானே சுயநினைவு இழக்க வைக்கும் Blackout Challengeஇல் ஈடுபட்ட அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியும், விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியும், உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் tiktokற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள Mathew Bergman, பயனர்களுக்கு இவ்வாறான ஆபத்தான challengeஐ promote செய்ததற்காகவும், அசம்பாவித சம்பவம் நடக்க காரணமாக இருந்ததற்காகவும் tiktok மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முறையிட்டு வருகிறார்.

Skullbreaker Challenge, Corona Virus Challenge மற்றும் Fire Challenge என தொடர்ந்து பயனர்களை அபாயத்தில் தள்ளி ஆதாயம் பார்க்கும் Tiktok நெறிமுறை படுத்த பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.