தொழுப்பேடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர்

258

தொழுப்பேடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது மோதிய கோர விபத்தில் பஸ் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி மதுராந்தகம் அருகே ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.