இதுதான் நிஜ தலையணை மந்திரம்

292
Advertisement

நம்மில் பலருக்குத் தலையணை இல்லாவிட்டால்
தூக்கமே வராது. தலையணை இல்லாமல் புரண்டு
புரண்டு படுத்திருப்போம்.

ஆனால், தலையணை இல்லாமல் தூங்கினால்
உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழ்வதாகத்
தெரியவந்துள்ளது.

தற்போதைய காலத்தில் தலையணை இல்லாமல்
தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தலையணை வைத்து உறங்குவதை சம்பிரதாயமாக,
மரபாகப் பின்பற்றி வருகிறோம்.

சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை வைத்துத்
தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
வேறுசிலரோ கைக்கு ஒரு தலையணை, காலுக்கு ஒரு
தலையணை என்று தலையணை நாயகனாகவே
உறங்கிக் கழிப்பார்கள்.

இன்னும் சிலருக்குத் தலையணையைக் கட்டிப்பிடித்தபடி
படுத்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும்.

எனினும், தலையணை இல்லாமல் தூங்குவதே
ஆரோக்கியம் தருகிறது.

தலையணை இல்லாமல் உறங்குவோருக்கு முதுகுத்
தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் உள்ளது.
இதனால், உடல்வலி, தண்டுவடப் பிரச்சினை ஏதும்
வருவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது-

உயரமான தலையணை வைத்தால்தான் சிலருக்கு
உறக்கம் வரும். உயரமான தலையணை பயன்படுத்தும்போது
படுக்கை நிலை குறையும். தண்டுவடம் பாதிக்கப்படக்கூடும்.

தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை வலி,
கழுத்துவலி போன்றவை வராது. இதன் காரணமாக உடல்
எலும்புகளும் சீராக இருக்கும்.

தலையணை பயன்படுத்தாமல் தூங்குவோருக்கு
முகச்சுருக்கம் இருக்காது.

தலையணை இல்லாத தூக்கம்தான் நோய்களை விரட்டும்.

இரவில் உறங்குவது என்பது ஒரு வரம். இரவில் தூக்கம்
வராமல் தவிப்பவர்கள் ஏராளம். உலகில் 20 சதவிகிதம்பேர்
தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்று
கூறுகிறது.

ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் தூங்காமலிருந்தால்
நினைவாற்றலை இழப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் சராசரியாக 6 மணிமுதல் 8 எட்டுமணி
நேரம்வரை ஆழ்ந்து உறங்கினால்தான் பகலில்
சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உடலும் மனதும்
ஆரோக்கியமாக வலுவாக இருக்கும். எனவே, தலையணை
வைக்காமல் சமதளமான தரையில் கோரைப்
பாய் விரித்து அதில் படுத்து உறங்கி நிம்மதியாக இருப்போமே…..