தமிழக ஆளுநர் மீது திருமாவளவன் கண்டனம்

267

பட்டியல் சமூகத்தவரை பயன்படுத்தக்கூடாத பெயரில் குறிப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பயன்படுத்திய வார்த்தையை, மத்திய அரசு 1982 ஆம் ஆண்டிலேயே, பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், அது ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தைப் போற்ற வேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஆளுநர்.

அவரே இப்படிப் பேசியிருப்பதால் மற்றவர்களும் அச்சொல்லைத் தயக்கமில்லாமல் பயன்படுத்தக்கூடும் என்றும் எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பேசியது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.