சூரியனில் இருந்து வர கூடிய solar flare எனப்படும் அக்னி துகள்கள் காரணமாக பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

61

Solar flare எனும் அக்னி துகள்கள் என்றால், என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம். சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக “மின்னணு காந்த புல கதிர்வீச்சுதான்” அக்னி துகள்கள். நமது சூரிய குடும்பத்தில் ஏற்படும் மிக பெரிய வெடிப்பு என்றால் அது இதுதான். சூரியன் ஒவ்வொரு 11 வருடமும் தன்னுடைய துருவங்களை மாற்றிக்கொள்ளும். அதாவது இதன் வட மற்றும் தென் துருவங்கள் இடமாற்றம் அடையும். இந்த மாற்றம் நடக்கும் சில நிமிடங்கள் சூரியன் மிகவும் கொதிநிலையுடன் காணப்படும். முழுமையாக மாற்றம் நடக்கும் அந்த நேரத்தில் சூரியனில் இருந்து மோசமான கதிர்கள் வெளியாகும். இதன் காரணமாக சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக மின்னணு காந்த புல கதிர்வீச்சு ஏற்படும். இந்த கதிர்வீச்சு காரணமாக அக்னி துகள்கள் சூரியனில் இருந்து வெளியே வரும். பெரும்பாலான நேரங்களில் பூமியை நோக்கி வராமல் ஆழ்ந்த விண்வெளி பகுதியை நோக்கித்தான் அக்னி துகள்கள் செல்லும். அப்படியே பூமியை நோக்கி வந்தாலும் இதில் பெரும்பாலான துகள்கள் வரும் வழியிலேயே செயல் இழந்து விடும்.

இருப்பினும் அக்னி துகள்கள் காரணமாக நமது மின்னணு சாதனங்கள், தொடர்பு சாதனங்கள் ஆகியவை பாதிக்கப்படும். குறிப்பாக ஃபோன் போன்ற சாதனங்கள் அதிகம் பாதிக்கப்படும். ஏன்? வானத்தில் காந்த புலத்தை அடிப்படையாக வைத்து பறக்கும் பறவைகள் கூட இதனால் குழப்பம் அடையும். இது தொடர்பாக ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்னி துகள்கள் காரணமாக அதிக அழுத்தம் கொண்ட காற்று பூமியில் இருந்து மேலே செல்ல வாய்ப்பு உள்ளதால் செயற்கோள்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால் செயற்கைகோள்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. எப்படியோ, அக்னி துகள்கள் மனித உயிர்களை பலி வாங்காமல் இருப்பதே இயற்கை நமக்கு கொடுத்த வரம்….

Advertisement