ஜூன் 15ம் தேதி பூமியை நெருங்கும்  விண்கற்கள் என்ன நடக்கும்? விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

229
Advertisement

சூரியனைச் சுற்றி வரும் சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்கள் மற்றும் விண்கற்கள் பல நூறு கிலோமீட்டர் விட்டம் கொண்டவையாக இருக்கும்.

இந்நிலையில், 488453 (1994 XD) மற்றும் 2020 DB5 என அழைக்கப்படும் இரண்டு விண்கற்களும் பூமிக்கு அருகில் வர உள்ளன. ஜூன் 15 அன்று பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டின் விட்டமும் 150 மீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் அபாயகரமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விண்கற்களின் சுற்றுப்பாதை தீர்மானிக்கப்பட்டவுடன், விஞ்ஞானிகள் அதிநவீன கணித மாதிரிகள் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீடுகளைப் பயன்படுத்தி அதன் எதிர்காலப் பாதையை கணிக்கின்றனர். அதில், அவை பூமியை நெருங்குவதற்கான வாய்ப்பு மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றைக் அனுமானிக்கின்றனர்.

.2020 DB5 என்ற விண்கல் ஜூன் 15 அன்று பூமிக்கு அருகில் வரும். கிட்டத்தட்ட 43,08,418 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 34,272 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும். இது கடைசியாக 1995 இல் பூமிக்கு அருகில் வந்தது. ஜூன் 15ஆம் தேதி நெருங்கிய பிறகு, 2048 வரை வேறு எந்த விண்கல்லும் பூமியை நெருங்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.