ரயில் மோதாமல், நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்

246
Advertisement

ரயில் மோதுவதிலிருந்து உயிர் பிழைத்துள்ள இளைஞரின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், ரயில் தண்டவாளங்கள் அருகே விபத்துகள் நடப்பது இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 12 ஆம் தேதி மாலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள. அந்த வீடியோவில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தண்டவாளத்தைக் கடப்பதைக் காணலாம். ஆனால், அந்தப் பைக்கின் டயர் தண்டவாளத்தில் சிக்கியது. அந்த நபர் ரயில்வே லைனிலிருந்து பைக்கை வெளியே கொண்டுவர முயற்சி செய்கிறார். அதற்குள் தண்டவாளத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த ராஜதானி ரயிலைப் பார்த்த அவர், அங்கிருந்து நகர்கிறார்.

வந்தவேகத்தில் தண்டவாளத்தில் சிக்கிய டூ வீலரை ராஜதானி ரயில் சுக்குநூறாக நொறுக்கிவிட்டுச் சென்றது.

வாகனம் ஓட்டி வந்த நபரோ உயிர் தப்பியதையும், கண்ணெதிரே தனது டூ வீலர் சிதைக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.

சில நொடிகள் பொறுத்திருந்து சென்றால், அவரது பைக் சேதமில்லாமல் கிடைத்திருக்கும். பொறுமை இல்லாமல் அவசரப்பட்டுச் சென்று பைக்கையும் இழந்து, அதிர்ச்சியையும் சந்தித்து நிம்மதியையும் இழந்துள்ளார் அந்த இளைஞர்.