இளஞ்சிவப்பு நிறத்தைக் காதலித்துத் திருமணம் செய்த பெண்

202
Advertisement

இளஞ்சிவப்பு நிறத்தைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதும், பிறகு விவாகரத்து செய்துகொண்டதும், மற்றோர் இளைஞர் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து நான்கே நாட்களில் விவாகரத்து செய்துகொண்டதும் சில மாதங்களுக்குமுன்பு இணையத்தில் வைரலானது.

அந்த வகையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த 40 வயதான கிட்டன் கே. செரா என்னும் பெண் தனக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு நிறத்தைத் திருமணம் செய்து வரலாறு படைத்துள்ளார்.

Advertisement

இதற்காகப் பிரம்மாண்டமான விழாவை நடத்தித் திருமணம் செய்து புத்தாண்டையும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

திருமண அரங்கில் ஆடைகள், அலங்காரங்கள் என்று அனைத்தும் பிங்க் நிறத்திலேயே இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தின் மீதான தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக, திருமணத்தின்போது இளஞ்சிவப்பு தலைப்பாகை, பஞ்சு போன்ற இளஞ்சிவப்பு கோட்டு இணைந்த இளஞ்சிவப்பு நிறக் கவுனை அணிந்திருந்தார்.

தலைமுடிக்கும் இளஞ்சிவப்பு வண்ணத்தைப் பூசியிருந்தார். இளஞ்சிவப்பு மோதிரம் அணிந்திருந்தார். இளஞ்சிவப்பு திருமண கேக் வெட்டினார். அவரது தோழிகள், உறவினர்கள்கூட இளஞ்சிவப்பு ஆடையே அணிந்திருந்தனர்.

1980 ஆம் ஆண்டுமுதல் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்துவருகிறார் செரா. இரண்டாண்டுகளுக்குமுன் பளிச்சென்ற நிறமுள்ள ஆடை அணிந்ததற்காக ஒரு சிறுமி செராவைக் கிண்டல் செய்துள்ளார். அதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளார் செரா.

தனது வாழ்நாள் முழுவதும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை மட்டுமே அணிவதாக செரா சத்தியம் செய்துள்ளார்.

ஒரு நிறத்தைத் திருமணம் செய்துகொண்டது மற்றவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால், செராவுக்கோ அது ஒரு வாழ்க்கைப் பந்தமாகத் தோன்றியுள்ளது.

வாழ்க மணமக்கள்… வளர்க அவர்களின் திருமண வாழ்க்கை…
நாம வெறென்ன சொல்ல?