குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்

231

அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி செல்ல வந்துள்ளதாக சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

மேலும், அவரது காரையும் தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் இருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்