குவாட்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் எந்த திட்டமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது…

104
Advertisement

வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இதனிடையே, குவாட் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குவாட்டின் பலத்தை உறுதிசெய்வதில் உறுப்பினர்கள், கவனம் செலுத்துகிறார்கள் என்றும்
குவாட் பரந்த அளவிலான இந்தோ-பசிபிக் கூட்டாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்புகளை வரவேற்கிறது எனவும் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் கரீன் ஜீன்
தெரிவித்தார்.