புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

170
Advertisement

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்க மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க, உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்ஹா அமர்வில் இன்று விசாரணை வருகிறது.