வெயில் காலத்தில் FRIDGEஇல் கேட்கும் விநோத சத்தம் உணர்த்தும் அபாயம்! அலட்சியம் வேண்டாம்..!

23
Advertisement

வெயில் காலத்தில் நமக்கு உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்வது போலவே, மின்சாதனங்களுக்கும் பல சிக்கல்கள் வருவது வாடிக்கை.

குளிர்சாதனப்பெட்டியில் thermostatஇன் சிக்னல் on மற்றும் off ஆகும் சத்தம் இயல்பாக எப்போதும் கேட்கக் கூடியது. வழக்கத்திற்கு மாறாக கேட்கும் சத்தங்களை கவனித்து உடனடியாக சரிசெய்வது அவசியம். குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து வரும் சத்தம் வடிகால் தொட்டியில் உள்ள பிரச்சினையை உணர்த்துகிறது.

அதை கழற்றி சுத்தம் செய்து மாட்டுவது பயன் தரும். குளிர்சாதனப்பெட்டியின் பின்புறத்தில் இருந்து வரும் சத்தம் மின்தேக்கி அல்லது கம்ப்ரசரில் உள்ள சிக்கலை சுட்டிக் காட்டுகிறது. மின்தேக்கி விசிறியில் இருந்து வரும் சத்தத்தை சரி செய்ய மின்விசிறி பிளேடுகளில் படிந்திருக்கும் தூசியை சுத்தம் செய்வது உதவியாக அமையும்.

இதை செய்ய எலக்ட்ரிஷியனின் உதவியை நாடலாம். Fridgeக்கு உள்ளே இருந்து வரும் கீச்சிடும் சத்தம் வந்தால் குளிர்சாதன மின்விசிறியில் பிரச்சினை இருக்கலாம்.

அப்போது பழுது பார்க்கும் நபர்களை அழைத்து சரி செய்ய வேண்டும். மின்தேக்கி செயல் இழந்து விட்டாலோ அல்லது மோட்டார் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, Fridge உள்ளிருந்து தட்டுவது போன்ற சத்தம் கேட்கும். Freezer உள்ளிருந்து கிளிக்-கிளிக் என்ற சத்தம் வந்தால் நீர் இணைப்பு வால்வில் தளர்வு அல்லது நீர் விநியோகம் செய்யும் ஒயரில் துண்டிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்பதால் துரிதமாக தகுந்த நபர்களை அழைத்து பழுதுகளை சரி செய்வது சிறப்பாக அமையும்.