மக்கள் தொகை கணக்கெடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

290
Advertisement

அண்மையில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அதிக சிங்கிள்ஸ் வசிக்கும் அரிய கிராமம் இருப்பது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது திடநாடு என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் அண்மையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது திருமண வயதைக் கடந்தும் பல ஆண்களும் பெண்களும் இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனால், மனம் உடைந்த கணக்கெடுக்க வந்த அதிகாரிகள், இந்த முதிர் காளைகள், கன்னிகளுக்குத் தாங்களே வரன் பார்க்க முடிவுசெய்தனர். இதற்கான மேரேஜ் டைரி என்னும் பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கினர்.

இதில் திருமணமாகாதவர்களின் விவரங்களைப் பதிவுசெய்தனர். இந்த இணையதளம் தொடங்கிய மூன்றே நாட்களில் 700க்கும் அதிகமான வரன் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த விவரங்களைக் கேரளாவின் இதர பஞ்சாயத்து, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘வேலையைச் செய்தோம் சம்பளம் வாங்கினோம்’ என்றில்லாமல், சமூக அக்கறையோடு செயல்பட்டிருக்கும் இந்த அதிகாரிகளைப் பெருமையாகக் கூறிவருகின்றனர் மலையாளிகளும் இணையதள வாசிகளும்.

இதப் பத்தி நீங்க என்ன நெனைய்க்கிறீங்க சிங்கிள்ஸ்?