முதலையிடமிருந்து குட்டியைக் காப்பாற்ற
தன்னையே தியாகம் செய்த தாய் மான்

266
Advertisement

தன் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முதலைக்கு தன்னையே
இரையாக்கிக்கொண்ட மானின் வீடியோ நெஞ்சை உறையவைக்கிறது.

பெண் மான் தன் குட்டிகளை எந்தளவு நேசிக்கிறது என்பதைக் காட்டும்
வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

நெஞ்சைப் பதறவைக்கும் அந்தக் காணொளிக் காட்சியில் ஆற்றில்
குட்டி மான் நீந்தி வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்தக் குட்டி மானை வேட்டையாடுவதற்காக ஒரு முதலை விரைந்து
நீந்தி வருகிறது. குட்டியின் தாய் அதைப் பார்த்து உடனடியாகத்
தண்ணீரில் குதித்துத் தன் குட்டியின் உயிரைக் காப்பாற்றத் தன்னால்
இயன்ற வேகத்தில் நீந்துகிறது.

முதலைக்கு முன்னால் நீந்தும்போது தாய் வேகத்தைக் குறைக்கிறது.
அதேசமயம் மான் குட்டியோ அதிவேகமாக நீந்திச்செல்கிறது. தனது
குட்டி நீந்திச்செல்லும்போது தாய் மான், தன்னை முதலை இரையாக
எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. முதலை தனது பற்களால் தாய் மானைக்
கவ்வி அதை உண்பதற்காக எடுத்துக்செல்கிறது.

இந்தக் காட்சி காண்போரின் மனதை பரிதவிக்க வைத்து உறைய வைக்கிறது.

பொதுவாகத் தாய்மான்கள் தங்கள் சந்ததியைப் பாதுகாக்கக் கடுமையான
முயற்சிகள் எடுத்துக்கொள்கின்றன. 2 வயது வரைத் தங்கள் சந்ததிகளுடன்
நெருக்கமாக இருக்கின்றன. இந்த நிலையில் தன் குட்டிக்காகத் தன்னையே
முதலைக்கு இரையாக்கி தாய் என்றால் தியாகம் என்பதை அனைத்து
உயிரினங்களுக்கும் உணர்த்தியுள்ளது.

தாயின் அன்பு, ஆற்றல் அழகு, வீரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
தாய் மான் தன் குட்டியைக் காப்பாற்றத் தியாகம் செய்த நெஞ்சைப் பதறவைக்கும்
வீடியோ உங்கள் பெற்றோரையும் குடும்பத்தாரையும் புறக்கணிக்காதீர் என்பதை
நினைவூட்டுகிறது. அவர்களை மதிக்கவும் கவனிக்கவும் தவறாதீர் என்பதைப்
பாடமாகச் சொல்கிறது இந்த சம்பவம்.