கடலுக்கு சளி பிடிக்கிறது

263
Advertisement

மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சளி பிடிப்பதும்
அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் தெரிந்ததுதான். ஆனால்,
கடலுக்கு சளி பிடித்தால் என்னாகும்?

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் கடற்கரையோரமாக
அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் பெயர் மர்மரா. இந்த
மர்மராவுக்குத்தான் சளி பிடித்திருக்கிறது.

அதாவது, சீஸ்நெட் எனப்படும் நுண்ணுயிர்ப் பாசிகள் திடீரென்று
அசுரத்தனமாக வளர்ந்து வருகிறது. சுமார் 10 செ.மீ அளவுக்கு
அடர்த்தியாக வளர்ந்து கடல் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது.
இந்த நுண்ணுயிர்ப் பாசிகளைத்தான் கடல் சளி என்கின்றனர்
கடலியல் ஆய்வாளர்கள்.

இந்தக் கடற்சளியால் கடலின் தன்மை மாறிவருவதாகக்
கவலைப்படுகின்றனர் கடல் விஞ்ஞானிகள்.

கடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை
இந்தக் கடற்சளி துண்டிக்கிறதாம். கடலை வெப்பமாக்குகிறது,
கடலில் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது என்றெல்லாம்
கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.

இதனால் கடலுக்கு அடியிலுள்ள உயிர்களுக்கு ஆபத்து
ஏற்படுமென்று அஞ்சுகின்றனர்.

ஏனெனில், துருக்கி நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலங்களுள்
ஒன்றாக இஸ்தான்புல் நகரம் விளங்குகிறது. கடலுக்கு மட்டுமன்றி,
மனிதர்களுக்கும் சுற்றுலா வருவாயைப் பாதிக்கும் என்பதே இந்த
பயத்துக்கு காரணம்.