ரூ.999 விலையில் ஐபோன் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்கள் விற்பனை இணையவாசிகள் அதிர்ச்சி..

136
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் இந்தியச் சந்தையில் சலுகையின் அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதற்கான தகவல்கள் வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

அது என்ன ஆஃபர் என்றால், இந்த மாடலின் இன்றைய விலை ஃபிளிப்கார்டில் 18,999 என்று விற்கப்படுகிறது, ஆனால் தற்போது 18,000 தள்ளுபடி செய்து ஆஃபரில் வெறும் 999 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இதுகுறித்து ஃபிளிப்கார்டில் செக் செய்தபோது ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய் தள்ளுபடி செய்யும் ஆஃபர் உள்ளது, மேலும் இந்த ஆஃபர் கோட்டாக் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் உள்ளது.

ஆனால் ஸ்மார்போன் எக்ஸ்சேன்ஜ் அஃபரை பயன்படுத்தி அதிகபட்சமாக 18,000 வரை தள்ளுபடி பெறலாம், இருப்பினும் இந்த ஆஃபரை பெறுவது மிகக் கடினம் அதற்கு நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் ஸ்மார்போன் மிகவும் அற்புதமான கண்டிஷனில் இருக்க வேண்டும். 

எனவே இந்த எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை தவறாகக் கூறி மக்களைக் குழப்பியுள்ளது ஒரு வைரல் தகவல், மேலும் இதுபோன்று பொய்யான லிங்குகளும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்படுகிறது, ஆனால் தவறுதலாக லிங்கை தொட்டால் போன் ஹேக் செய்யப்படும், இதனால் இந்த தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்.