இந்தியாவில் சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்ப்பு

221

இந்தியாவில் பண்டிகை கால சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 22ம் தேதி வரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சில்லறை வர்த்தகம் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 சதவீதம் ஆட்டோ மொபைல் துறையில் இருந்து மட்டுமே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.