பாராளுமன்றத்திற்குள் புகுந்து கலக்கிய எலியின்
வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது-
வழக்கமாக எம்பிக்கள்தானே பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து
கலக்குவார்கள்…. இங்கு வித்தியாசமாக இருக்கிறதே என்கிறீர்களா….
இது இங்கல்ல…
பிரான்ஸ் நாட்டின் ஆன்டலூசியா பாராளுமன்றம்
நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு புகுந்துவிட்ட
எலி ஒன்று அங்குமிங்கும் ஓடி எம்பிக்களைக் கலகலப்புக்கு
உள்ளாக்கியது.
அப்புறமென்ன.. ஒரு சிறிய இடைவேளை விட்டாங்க….
எலியும் ஓடிப்போய்விட்டது. மறுபடியும் தொடர்ந்து
பாராளுமன்றம் இயங்கத் தொடங்கியது. எம்பிக்களும்
தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கினர்.
அரசியல்வாதிகள்தானே நாற்காலிக்கு அலைவார்கள்.
ஒருவேளை இந்த எலியும் சென்ற பிறவியில் அரசியல்வாதியாக
இருந்திருக்குமோ…?