தொழில்நுட்ப கோளாறே, ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்….

130
Advertisement

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாகநாகா பஜார் நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில் 3ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சற்று முன்னே, சரக்கு ரயில் “அப் லூப் லைனில்” சென்று நின்றது. பேனல் போர்டில் புள்ளிகள் சரியாக காட்டிய நிலையில், தண்டவாளம் மீண்டும் மெயின் லைனுக்கு மாறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான வழித்தடத்திற்கு பதிலாக, ‘லூப் லைனை கடந்து சென்று அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த ரயில் அப் லூப் லைனுக்குள் நுழைந்து ‘லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், டவுன் மெயின் லைன் வழியாக கடக்க முயன்றபோது மற்றொரு விபத்தும் நடந்ததாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.