ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய்

236
Advertisement

அந்தந்த பருவத்தில் விளையும் பழங்களையும்
காய்கனிகளையும் உண்டுவந்தால் உடலில் நோய்
அண்டாது, உடல் ஆரோக்கியமாக இருக்குமென்று
டாக்டர்கள் கூறுகின்றனர்.

இப்போது மாம்பழ சீஸன் தொடங்கிவிட்டது.
மாம்பழம் சாப்பிடாவிட்டால் வீங்கித் தூங்கிச்
சாவார்கள் என்பது ஒரு சொலவடையாகவே உள்ளது.

அதனால் ஆசை ஆசையாக மாம்பழம் தின்ன விரும்பினால்,
ஒரு மாம்பழத்தின் விலையைப் பாத்து மயக்கமே
வந்துவிடும்போல.

Advertisement

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரம் ரூபாயாம்…
இந்த மாம்பழம் நூர்ஜகான் என்கிற ரகத்தைச்
சேர்ந்தது.

ஆப்கானிஸ்தானில் இந்த மாம்பழம் மிகப் பிரபலம்
என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள். தற்போது
இந்த ரக மாம்பழத்தை மத்தியப்பிரதேசத்தில்
விளைவிக்குகிறார்கள்.

ஒவ்வொரு மாம்பழமும் இரண்டரை கிலோவிலிருந்து
மூன்றரை கிலோ எடை இருக்குமாம்… ஒவ்வொரு
மரமும் சராசரியாக 80 மாங்காய் காய்க்குமாம்.

அதனால் இந்த மாம்பழம் தேவைப்படுகிறவர்கள்
முன்கூட்டியே புக் பண்ணிக்கணுமாம். 500
ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும்
இந்த மாம்பழம் விற்கப்படுகிறது.

இந்த வருஷம் விளைஞ்ச மாம்பழம் ஒன்று மூன்று
கிலோ எடை இருக்காம். இந்த மாம்பழம் ஒரு அடி
அளவுக்குப் பெரியதாக இருக்குமாம்…

இந்த மாம்பழத்துக்கு காப்புரிமை வாங்குவதற்கு
மத்தியப்பிரதேச அரசு முயற்சி செய்வதாகக் சொல்கிறார்கள்.

இந்த மாம்பழத்தை விளைவித்த விவசாயி மூன்றே
மூன்று மரங்கள்தான் வளர்த்திருக்கிறார். இந்த
3 மரங்களையும் சேர்த்து மொத்தமே 250 மாங்காய்தான்
காய்த்திருக்கிறதாம்.

இந்த 250 மாங்காய்களையும் வாங்குவதற்கு பலபேர்
முன்பதிவு செஞ்சுட்டாங்களாம்….

தேன் மாதிரி ரொம்ப தித்திப்பாக சுவையாக இருக்குமாம்
இந்த நூர்ஜஹான் மாம்பழம்…வாயில் போட்டதும்
பஞ்சுமிட்டாய் மாதிரி சுலபமா கரைஞ்சு போயிருமாம்…