ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 93 பைசா தான்…. எங்கே தெரியுமா?

426
Advertisement

வெனிசுலா நாட்டில் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய் 93 பைசாவுக்கு விற்கப்படுவது வாகனம் வைத்திருப்போரின் கண்களை விரிய வைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகனங்களின் எரிபொருள் விற்பனை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறைவான உற்பத்தி, அதிகமான தயாரிப்புச் செலவு போன்ற காரணங்களால் பெட்ரோல் விலை கட்டுக்குள் இல்லாமல் உயர்ந்துகொண்டே போகிறது.

இந்த நிலையில் வெனிசுலா நாட்டில் இரண்டு ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது என்கிற தகவல் எப்படி என்னும் மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதேசமயம், உலகிலேயே மிக அதிகமாக ஹாங்காங் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கும், நெதர்லாந்தில் 172 ரூபாய்க்கும், நார்வேயில் 170க்கும், டென்மார்க்கில் 162க்கும் விற்கப்படுகிறது.

ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாய்க்கும், சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது