கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்

71

ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கு 20 ஆண்டுள் சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சண்முகவேல் என்பவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஞ்சிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement