தடையை மீறி போராடிய முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர்

190

சேலத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் சிறுபான்மை அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் என்.ஐ.ஏ, அமலாக்கதுறை ஆகியவற்றை வைத்து ஏவுவதாக கூறி, சேலம் கோட்டை பகுதியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காக முஸ்லிம் அமைப்புகள் ஊர்வலமாக வந்த நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று, கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இந்த கூட்டமைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.