நடனமாடி நோயாளியைக் குணப்படுத்திய நர்ஸ்

280
Advertisement

பக்கவாத நோயாளிக்குத் நடனமாடி சிகிச்சையளித்த செவிலியரின் வீடியோ இணையதளவாசிகளின் இதயங்களை வருடிவருகிறது.

மருத்துவத்தில் செவிலியர்களின் பணி முதுகெலும்பாகத் திகழ்கிறது. பல நேரங்களில் தொடுதலின் வலிமை, புன்னகை, அன்பான வார்த்தைகள், செவிமடுத்தல், அக்கறை கலந்த நேர்மையான செயல் போன்ற செவிலியர்களின் செயல்களால் நோயாளிகள் விரைவில் குணமாகி நலம்பெறுகிறார்கள்.

அந்த வகையில், ஒரு நர்ஸ் புதுமையான முறையைப் பயன்படுத்திப் பக்கவாத நோயாளியை சில பிசியோதெரபி சிகிச்சைகளைச் செய்ய வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

வீடியோவில் காணும் அந்தப் புத்திசாலி செவிலியர் தனது நடன செய்கைகளால் பக்கவாத நோயாளிக்கு சில பிசியோதெரபி சிகிச்சைகளை அளிக்கிறார். நோயாளி உற்சாகமாக இருப்பதற்கு நடனமாடுகிறார், நோயாளியையும் நடனமாடச் செய்து உற்சாகம் அடையச்செய்கிறார்.

படுத்த படுக்கையாக உள்ள அந்தப் பக்கவாத நோயாளி, செவிலியரின் அன்பான, அக்கறையான சேவையால் மகிழ்ச்சியோடு அந்தப் பயிற்சிகளைச் செய்கிறார். இதனால், அனைவரின் இதயங்களிலும் அந்த நர்ஸ் இடம்பிடித்துவிட்டார்

தொற்றுநோய், கொடிய நோய் போன்றவற்றின்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்து வரும் செவிலியர்கள் தேசத்தின் காவலர்கள் என்றால், மிகையல்ல. அந்த வகையில், ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ செவிலியரைக் கையெடுத்துக் கும்பிட வைத்துவிட்டது.
.