அடுத்தகட்ட போர் விண்வெளியில்லா !

247
Advertisement

உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமாக படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், போரை நிறுத்தும்படி பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக் கொண்டதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவுக்கு வழங்கமால் நிறுத்திக் கொண்டன. இதில் ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக பனிப்போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் தங்களது தரப்பில் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை ரஷ்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

அதாவது ரஷ்யாவின் Propulsion சிஸ்டங்களின் உதவியுடன்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயக்கம் அமைந்துள்ளது என்றும். அதை நாங்கள் நிறுத்திக் கொண்டால் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 420 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் ஐரோப்பா, சீனா, இந்தியா அல்லது அமெரிக்காவின் மீது விழும் என ரஷ்ய விண்வெளி முகமையின் இயக்குனர் ரோஸ்கோஸ்மோஸ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதனால் இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் பூமியை கடந்து விண்வெளி வரை சென்றுள்ளது. இது என்னவோ நம் ஊர் சினிமாக்களில் புராண கதைகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் திரைக்கதைகளில் நாயகனும், வில்லன் தரப்பும் பூலோகம், விண்ணுலகம் மற்றும் பாதாள லோகம் என மாறி மாறி சகலத்திலும் சண்டை போடுவதை போலவே உள்ளது.ஏற்கனவே விண்வெளியில் கழிவுகள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்போது ரஷ்யா பூமியில் உக்ரைன் உடன் யுத்தம் புரிந்து வருகிறது. ஆனால் மறைமுகமாக தன் வசமுள்ள தொழில்நுட்ப வல்லமையை கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்துவதோடு விண்வெளியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயல்கிறது. 

வரும் நாட்களில் தேவையிருந்தால் விண்வெளியில் மற்ற நாடுகளுடன் போரிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. அதனால் பாதிப்பு எந்த நாட்டுக்கு என்பதை பார்ப்பதை விட ஒட்டுமொத்தமாக அது மனித குலத்தையே பாதிக்கும். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் விண்வெளி ஆய்வுகள் மற்றும் சாட்டிலைட்கள் பெருமளவில் உதவி வருகின்றன. கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கசப்புகள் இருந்த போதிலும் உலக நன்மைக்காக சில முடிவுகளை இருநாடுகளும் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது போல உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்தால் பூமியிலும், விண்வெளியிலும் அமைதி திரும்பும் என நம்புவோம்.