திருமணத்துக்குமுன்பு வேண்டுமானால் ஆண்கள் வீரதீரம் மிக்கவர்களாக இருக்கலாம். திருமணம் ஆன மறு விநாடியே மனைவிக்கு அடங்கித்தான் போக வேண்டும். அப்பதான் வாழ்க்கை சும்மா ஜாலியா….. இருக்கும்.
அப்படியொரு ஜாலியான நிகழ்வுதான் இது.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் ஜோடி…. பந்தியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குகிறது. அப்போது, புது மனைவி கவனிக்காத நிலையில், அவரது இலையில் உள்ள அப்பளத்தை எடுக்க முயற்சி செய்கிறார் அந்தப் புது மாப்பிள்ளை.
காதலியே மனைவியாகிவிட்ட சந்தோஷத்தில் அவரது இலையில் உள்ள அப்பளத்தை ஆவலோடு எடுத்து சாப்பிட நினைத்த காதல் கணவருக்கு காதல் மனைவியின் செயல் மிரட்டலாக அமைந்தது.
அப்பளத்தை எடுக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்ட காதல் மாப்பிள்ளையைப் பார்த்து ஒரே ஒரு முறைப்பு….
அவ்வளவுதான்…..
தனது காதல் மனைவியின் அதிரடிப் பார்வையில் அதிர்ந்துபோன இந்நாள் கணவர் அப்பளத்தை அப்படியே இலையில் வைத்துவிட்டு, தனது இலையில் உள்ள சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார்.
அதைப் பார்த்து ஆனந்தமாகப் புன்சிரிப்பு பூக்கத் தொடங்கினாள் அந்தக் காதல் மனைவி. பிறகு, அவரும் புன்னகையோடு சாப்பிடத் தொடங்குகிறார்.
வாழ்க்கையின் தொடக்கத்திலேயே கணவரை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்ட சந்தோஷமோ……