https://www.instagram.com/reel/CWjloLRA9zs/?utm_source=ig_web_copy_link
விமான நிலையத்திலிருந்து தன்னை அழைத்துச்செல்லச் சென்ற மகனை தாய் செருப்பால் அடித்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
என் அம்மா திரும்பி வந்துள்ளார் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெண் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். அவரை வரவேற்க அவரது மகன் பூங்கொத்துடன் we missed you என்னும் வாசகம் எழுதிய பதாகை ஏந்தி வருகிறார்.
அம்மாவைக் கண்ட பேரானந்தத்தில் மகன் வாயெல்லாம் புன்னகையோடு முன்னோக்கி வர, மகனைக்கண்ட அம்மாவுக்கோ தலைக்குமேலே கோபம் வந்ததே பார்க்கலாம்….சட்டென்று குனிந்து தனது காலில் உள்ள செருப்பைக் கழற்றி மகனை அடித்து விளாசுகிறார்….
சமூக ஊடகத்தில் வைரலான இந்த வீடியோவை 132 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். எதற்காக மகனை அந்த தாய் அடித்தார் என்பது தெரியவில்லை.
என்றாலும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மகன்செய்த செயல்களைத் தெரிந்துகொண்டு கோபப்பட்டதன் விளைவுதான் இது என்கின்றனர் சில தாய்மார்கள்…
அதேசமயம் இந்த வீடியோ prank video என்கின்றனர் சிலர்.