அம்மா வயதுள்ள பெண்ணைத்
திருமணம் செய்த இளைஞர்

40
Advertisement

தன் தாய் வயதுள்ள ஒரு பெண்ணைத் திருமணம்
செய்த இளைஞரின் செயல் வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது.

நம்நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும்
ஆங்காங்கே விநோதமான திருமணங்கள் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. முறையான, முறையற்ற
இந்த வகைத் திருமணங்கள், இணையத்தின் தயவால்
உடனே அம்பலமாகிவிடுகின்றன.

மிகசமீபத்தில்கூட தமிழகத்தில் 17 வயதுப் பள்ளி
மாணவனை அவனுடைய 26 வயது ஆசிரியைத்
திருமணம் செய்துகொண்டதும், பின்னர் புகாரின்
பேரில் அந்த ஆசிரியைக் கைதுசெய்யப்பட்டதும்
நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

தற்போது அதுபோல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

25 வயது இளைஞரான அலெக்ஸாண்டர் 47 வயதாகும்
பெண்ணான செனோரா ஆலனைத் திருமணம்செய்து
உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர்களிருவரும் ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார்களாம்.

இவர்களின் திருமணம் அவர்கள் வெளியிட்ட டிக்டாக்
வீடியோவால் அம்பலமாகிவிட்டது.

மற்றவர்களின் விமர்சனங்களைக் காதில் வாங்கிக்
கொள்ளாமல் ஜாலியாக வாழ்ந்துவருகிறார்களாம் இவர்கள்.