காங்கிரஸின் இமாலய வெற்றிக்கு பின் இருந்த MASTERMIND! சோதனைகளை சாதனையாய் மாற்றிய அதிசயம்…

164
Advertisement

விறுவிறுப்பாக வெளியாகியுள்ள கர்நாடகா தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் அமோகமான வெற்றியை உறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கு, முறையான திட்டமிடல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான வியூகங்களை வகுத்து வழங்கியதில் சுனில் கனுகோலுவின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. முன்னதாக பிரபல அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றி வந்த சுனில் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வந்தார்.

தமிழக அரசியலை பொறுத்தவரையில் அதிமுக திமுக என இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆலோசகராக செயல்பட்டுள்ளார் சுனில். 2016இல் ‘நமக்கு நாமே’ போன்ற திருப்புமுனை திட்டத்தை திமுகவிற்கு வகுத்து கொடுத்தவர் சுனில். வெற்றி பெறவில்லை என்றாலுமே இது போன்ற திட்டங்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின. கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ் கட்சியின் 2024 Election Task Forceஇல் சோனியா காந்தி வெளியிட்ட குழுவில் சுனில் கனுகோலுவும் இடம்பெற்றிருந்தனர்.

70க்கும் மேற்பட்ட சாதகமற்ற தொகுதிகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொண்டது, PayCm , ByeByeBJP மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா உள்ளிட்ட முக்கிய பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்துள்ளார் சுனில். பிரஷாந்த் கிஷோர் போல் இல்லாமல் சமூகவலைதளங்களில் கூட பார்க்க முடியாத நபரான சுனில், அரசியல் சார்பற்று பல கட்சிகளுக்கு வேலை பார்த்திருந்தாலுமே தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து காங்கிரஸ் காரராகவே வேலை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.