ஃபுட்பால் ஷாக்ஸ் ஆர்டர் செய்தவருக்கு பிரா அனுப்பி ஷாக் கொடுத்த mantra

341
Advertisement

ஃபுட்பால் ஷாக்ஸ் ஆர்டர் செய்தவருக்கு மைன்ட்ரா என்னும் ஆன்லைன் நிறுவனம் பிரா அனுப்பிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்குமுன் காஷ்யப் ஸ்வரூப் என்னும் வாடிக்கையாளர் மைந்த்ரா என்னும் ஆன்லைன் நிறுவனத்திடம் கால்பந்து விளையாடும்போது அணிவதற்கான காலுறைகள் ஒரு ஜோடி வேண்டுமென ஆர்டர் கொடுத்திருந்தார். அவர்கொடுத்திருந்த ஆர்டரும் டெலிவரி செய்யப்பட்டது. அந்தப் பார்சலை பெருங்கனவோடு பிரித்துப் பார்த்தார் காஷ்யப்.

பார்சலைப் பிரித்துப் பார்த்த காஷ்யபின் முகம் சுருங்கிப்போனது. காரணம், பார்சலுக்குள் மிகப்பெரிய பிரா இருந்தது.

உடனே மைந்த்ரா நிறுவனத்திடம் இதுபற்றிக் கேட்டார். அதற்கு மைந்த்ரா நிறுவனம், ”சப்ளை செய்த பொருளைத் திரும்பப்பெற முடியாது” என்று ட்டுவிட்டரில் பதிலளித்தது.

அந்தப் பதிலைப் பார்த்து மேலும் ஷாக்கான காஷ்யப், ”நான் கால்பந்து விளையாட்டுக்கான ஷாக்ஸ்களுக்கு மந்த்ரா நிறுவனத்திடம் ஆர்டர்கொடுத்தேன். அந்த நிறுவனமோ Triumph brand பிரா ஒன்றை அனுப்பியது. இதுபற்றி மந்த்ரா நிறுவனத்திடம் தெரிவித்தேன். அதற்கு அந்நிறுவனம், ‘மன்னிக்கவும், அந்தப் பொருளைத் திரும்பப் பெறமுடியாது’ என்று தெரிவித்துவிட்டதால், நான் 34 சிசி பிரா அணிந்து கால்பந்து விளையாட வருகிறேன். தோழர்களே! நான் அதை ஸ்போர்ட்ஸ் பிரா” என்று அழைக்கிறேன் என்ற ட்டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

காஷ்யபின் ட்டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. மந்த்ரா நிறுவனத்தின் கவனத்துக்கும் சென்றது.

உடனே மன்னிப்புக் கேட்டது மந்த்ரா நிறுவனம்.
”உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட மனக்குறைக்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எங்கள் மேலாளர்களுள் ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார். இவ்விஷயத்தில் நீங்கள் காட்டிய பொறுமையைப் பாராட்டுகிறோம்” என்று பதிலளித்துள்ளது.

ஃபுட்பால் ஷாக்ஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பிரா அனுப்பிய செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதுபோன்ற செயல்கள் வேடிக்கையாக அமைந்துள்ளதுடன், ஆன்லைனில் ஆர்டர்செய்யும் வழக்கமுள்ளோரை இனியும் ஆன்லைனில் ஆர்டர்செய்ய வேண்டுமா என்றும் சிந்திக்க வைத்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் இதற்கு சிறிதுகாலத்துக்குமுன்பு ஆப்பிள் போன் ஆர்டர் செய்தவருக்கு நி5ர்மா சோப்புகளும், இயர் போன் ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவும் அனுப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடும்முன்பே அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மைன்ட்ரா ONLINE நிறுவனம்.

கடைகளுக்கு நேரில் சென்று நாமே தேடிப் பிடித்து, நன்கு விசாரித்து அறிந்து, விற்பனையாளர்களோடு உறவாடி, பேரம்பேசிப் பிடித்த பொருளை வாங்குவதில் ஏற்படும் மனநிறைவும் சந்தோஷமும் நிம்மதியும் ஆன்லைனில் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இதுபோன்ற செயல்கள் நிகழாது.

கவர்ச்சியான விளம்பரத்தாலும், நேரமில்லை என்று காரணம் சொல்லும் சோம்பேறித்தனத்தாலும் பணமும் நிம்மதியும் போய்விடுகிறது.