ஊசியைக் கண்டு மயங்கிச் சரிந்த மனிதர் பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டின் சான்டோஸ் கடற்கரைப் பகுதியில் துறைமுகத் தொழிலாளர்களுக்கான மெகா கொரோனா அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சௌ பௌலோ என்ற நடுத்தர வயது தொழிலாளி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் வந்தார்.
முதல் தவணை தடுப்பூசி என்பதால் அவர் மிகுந்த படபடப்போடும் எதிர்பார்ப்போடும் காணப்பட்டார். சௌ பௌலோவுக்கான முறை நெருங்கி வந்தபோது மேலும் பதற்றமடையத் தொடங்கினார்.
அதேசமயம், நர்ஸ் அந்த நபரை சமாதானப்படுத்தி தடுப்பூசி செலுத்த முயன்றார். ஆனால், தடுப்பூசி வேலை செய்யாமல் போய்விட்டது. அதற்குள்ளாகப் பயத்தில் கீழே விழுந்துவிட்டார் சௌ பௌலோ.
பின்னர், அவரை ஆசுவாசப்படுத்தி, தடுப்பூசி எந்தப் பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்றுகூறி தரையில் படுக்க வைத்தனர். சிறிது நேரம் கழித்து நம்பிக்கை பெற்ற அந்த நபர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.
குடிப்பதற்கு அவருக்கு தண்ணீர் தரப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் அவரைச் சூழ்ந்து நம்பிக்கையூட்டினர்.
ஊசியைக் கண்டு நடுத்தர வயது தொழிலாளி பயந்து கீழே விழுந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.