’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாகிறது.
அந்தத் திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசுத் தடை விதிக்கக் கோரியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன.
’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் நடப்பதாக அந்த முன்னோட்டம் இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.