ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்

340
Advertisement

ஒட்டகத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளரின் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. முதல் அலை, இரண்டாவது அலை என்று உலகத்தையே தாக்கத் தொடங்கிய கொரோனா, தற்போது உருமாறி ஓமிக்ரான் என்னும் புதிய பெயரில் படையெடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனைவருக்கும் செலுத்தும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 140 கோடியே 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் வசிப்போராக இருந்தாலும், பாலைவனப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்னும் தீவிர முனைப்போடு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதிக்கு ஒட்டகத்தில் சென்று அங்குள்ள வாலிபருக்கு தடுப்பூசி செலுத்திய பெண் சுகாதாரப் பணியாளரின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன.