மாமியாருக்கு மாலையிட முயன்ற புது மாப்பிள்ளை

305
Advertisement

வருங்கால மாமியாருக்கு புது மாப்பிள்ளை மாலையிட முயன்ற
சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருமண மேடையில் மணமகன் மணப்பெண்ணுக்கு
மாலையிடும் வைபவம் நடக்கத் தயாராக உள்ள நிலையில்
கையில் மாலையுடன் வந்த மணமகன்
வேறெங்கோ பார்த்தபடி சிறிது தடுமாற்றத்துடன்
மணமகளை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

கையில் உள்ள மணமாலையை வருங்கால மணமகளுக்கு
அணிவிப்பதற்குப் பதிலாக மாமியாருக்கு அணிவிக்க முயல, அவரோ
அதைத் தடுத்து தனது மணமகளுக்கு அணிவிக்க
புதுமாப்பிள்ளையின் கரங்களைத் திருப்பி விட்டார்.

அதன்பிறகு மணமகளின் கழுத்தில் மாலையிட முயன்ற
புது மாப்பிள்ளை சட்டென்று தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

சாதிக்க வேண்டிய இளம்வயதில் போதைக்கு
அடிமையானதால், மகிழ்ச்சிகரமான இல்லற
வாழ்வின் சிறப்பான தொடக்கத்தை சிக்கலாக்கியுள்ளார்
இந்த புதுமாப்பிள்ளை.

மிகவும் வருத்தத்துக்குரிய செயலாக
அமைந்துவிட்டது இந்தக் குடிகார மாப்பிள்ளையின் செயல்.

எந்தப் பிள்ளையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே….அதை நல்லவன் ஆக்குவதும்
தீயவன் ஆக்குவதும் அன்னையின் வளர்ப்பிலே
என்னும் சினிமாப் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது-

திருமணத்துக்குமுன் மாப்பிள்ளை மற்றும் பெண்ணைப்
பற்றித் தீர விசாரித்து நற்குணங்கள், நற்பண்புகள்
நிறைந்த வரன்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்விப்பது
பெற்றோரின் கடமை.