ஓட்டலை மிரட்டிய ராட்சதப் பல்லி

371
Advertisement

ஓட்டலுக்குள் ராட்சதப் புகுந்த பல்லியின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரணப் பல்லியைக் கண்டாலே பலரும் அருவறுப்பாக உணர்வோம். அதிலும், பெண்கள், சிறுமிகள் பல்லியைக் கண்டாலே அலறத் தொடங்கிவிடுவார்கள். துடைப்பத்தை எடுத்து பல்லியை விரட்டக்கூடத் தயங்குவார்கள்.

இத்தகைய மனோ பாவம் கொண்ட பெண்கள் ராட்சதப் பல்லியைக் கண்டால் எப்படி உணர்வார்கள்?

இதோ பாருங்களேன்…

ராட்சதப் பல்லியைக்கண்ட பெண்ணின் அழுகையை..

பாம்பைப்போல் வளைந்து நெளிந்து சென்ற அந்தப் பல்லியைப் பார்த்துப் பயந்து, நாற்காலிமீது ஏறிநின்று கூச்சல்போடத் தொடங்கினாள் ஓர் இளம்பெண். அப்போது அங்கு வந்த வேறொரு இளைஞர் ராட்சதப் பல்லியை அங்கிருந்து விரட்ட முயன்றார். அந்தப் பல்லியோ அங்கிருந்து செல்லாமல் மிரட்டுவதுபோல் பாவனை செய்தது.

தொடர்ந்து அதனை விரட்டியதால் ராட்சதப் பல்லி உணவகத்தைவிட்டு வெளியே சென்றது. இதனால், நாற்காலிமீது நின்று அழுதுகொண்டிருந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அப்பாடா ஒருவழியாகப் பல்லி போயே போச்… என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்தப் பெண்.

தாய்லாந்தில் உள்ள உணவகம் ஒன்றில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.