ஜமைக்கா நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி

161
Advertisement

மேற்கு இந்தியத் தீவு நாடான ஜமைக்கா நாட்டுக்குச் சென்ற
முதல் இந்திய ஜனாதிபதி என்னும்
பெருமையைப் பெற்றுள்ளார் ராம்நாத் கோவிந்த்.

ஜமைக்கா நாட்டில் சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்.
அவர்கள் இந்தியாவுக்கும் ஜமைக்காவுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் பாலமாகத்
திகழ்ந்துவருகின்றனர் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு ஏற்பட்டு 60
ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத்
கோவிந்த் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார். அவரை ஜமைக்கா
கவர்னர் ஜெனரல் பேட்ரிக் ஆலன், பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ்
இருவரும் வரவேற்றனர்.

Advertisement

அவர்களுடன் இந்தியா ஜமைக்கா நல்லுறவை வலுப்படுத்துவது பற்றி
ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்த உள்ளார். அத்துடன் அங்கு கிங்ஸ்டன் நகரில்
அம்பேத்கர் பெயரிடப்பட்ட சாலையைத் திறந்து வைத்தார். மேலும், அங்குள்ள
இந்தியா ஜமைக்கா நட்புத் தோட்டத்தை தொடங்கி
வைக்கிறார்.

மே மாதம் 18 ஆம் தேதி வரை அங்கிருக்கும் ராம்நாத் கோவிந்த்
ஜமைக்கா நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.