தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்…

91
Advertisement

நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பிருந்து, வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணரவும், ஏழை எளியோருக்கு உதவிடும், ஈகையை கடைமையாக்கும் உன்னத நிகழ்வாக ரமலான் போற்றப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கேரளா, கன்னியாகுமரியிலும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.