பார்வையற்ற யானை சாப்பிட வழிகாட்டும் யானை

294
Advertisement

https://www.instagram.com/p/CRO6SMOqCpC/?utm_source=ig_web_copy_link

பார்வையற்ற யானை ஒன்று உணவுண்ண மற்றொரு யானை
வழிகாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது,

புத்திக்கூர்மையுள்ள மிருகங்களுள் யானை முதலிடம் பெறும்.
அந்த வகையில் யானை ஒன்றின் செயல் மனிதர்களின்
இதயத்தைத் தொட்டு வருடுவதுபோல உள்ளது.

ஆறறிவு கொண்ட மனிதன்கூட பல நேரங்களில் சக
மனிதர்களுக்கு உதவுவதில்லை. ஆனால், 5 அறிவுகொண்ட
விலங்கினமான யானை, இரண்டு கண்களும் பார்வைத்திறன்
இல்லாத மற்றொரு யானையை சாப்பிட வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.

பிளாய் தாங் என்ற பார்வையற்ற அந்த யானையை மற்றொரு
யானையான பிளாய் தாங் அழைத்துச் செல்வது நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

வடக்குத் தாய்லாந்திலுள்ள தேசிய யானைகள் பூங்காவில்தான்
இந்த நெஞ்சை வருடும் செயல் நிகழ்ந்துள்ளது. மனிதர்கள்
இந்த யானையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.