ஒரேயொரு வாத்து ஒட்டுமொத்த பசுக்கூட்டத்தை விரட்டியடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதற்குமுன்பு நாய்க்கும் சிறுத்தைப்புலிக்கும் இடையே நடந்த அதிர்ச்சிகரமான மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. தன்னைத் தாக்கவந்த சிறுத்தைப் புலியைப் பார்த்துக் கடுமையாகக் குரைத்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது அந்த நாய். சிறுத்தைப்புலியும் அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.
அந்த வகையில், பசுமாடுகளும் காளை மாடுகளும் சேர்ந்து ஆக்ரோஷமாக தன்னைத் தாக்கவரும் நிலையில், அவற்றை தனித்துநின்று எதிர்கொண்டு மிரட்டி அனுப்பிவிட்ட ஒரு வாத்தின் ஊக்கமளிக்கும் வீடியோ அனைவரையும் கவர்ந்துவருகிறது.
மிகவும் பாதகமான சூழ்நிலையில் அமைதியாகவும், தன்னம்பிக்கை, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றோடும் இருந்தால் மிக எளிதாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது வாத்தின் இந்தச் செயல்.
வலிமையாகவும் பெரியதாகவும் உள்ள விலங்குகளை ஒரு சிறிய வாத்து எப்படி எதிர்த்து நிற்கும் என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த வீடியோவைப் பிரபலத் தொழிலபதிர் ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.