மனிதர்களை மிஞ்சிய நாய்

404
Advertisement

சிறுவனுக்கு உதவிய நாயின் வீடியோ வியப்பில் ஆழ்த்திவருகிறது.

நாய்கள் சந்தேகத்துக்கு இடமின்றி மனிதர்களின் சிறந்த நண்பர்கள்.
நன்றிக்கு இலக்கணமாகத் திகழும் நாய்கள் புத்திசாலித்தனம்
நிறைந்தவை என்பதும் அவற்றின்செயல்கள் மூலம் அவ்வப்போது
தெரியவந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில்
2 குழந்தைகள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் பந்தை எறிந்து
விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் விளையாடுவதை
அருகிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அவர்களின்
செல்லப் பிராணி ஒன்று.

அப்போது சிறுமி வீசிய பந்து அங்குள்ள சிறிய கிணற்றில் விழுந்துவிட்டது.
கிணற்றின் மேல் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால்,
பந்தை எடுப்பதற்கான தொரட்டியை எடுத்துவருவதற்காக வீட்டுக்குள்
செல்கிறாள் சிறுமி. அவளது சகோதரனோ கையை கிணற்றின்
மேல்பகுதியில் விட்டுப் பந்தைத் துளாவுகிறான்.

அதைக் கூர்ந்து கவனித்த நாய் கிணற்றில் பந்து கிடப்பதைப் பார்த்து
விட்டு, சிறுவனின் சட்டையைக் கவ்வி அவனை வெளியே இழுத்துவருகிறது.
பிறகு அங்குள்ள அரிவலையை எடுத்துக்கொண்டுவந்து கிணற்றிலுள்ள
பந்தைத் துளாவி எடுத்து சிறுவனின் கையில் தருகிறது.

நாயின் இந்த புத்திசாலித்தனமான செயல் தற்போது வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது.