வேங்கைவயல் வழக்கில் இன்று நடைபெற இருந்த 10 பேரின் DNA பரிசோதனை திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது…

139
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிவதற்காக, 10 பேருக்கு DNA பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, அவர்களுக்கு DNA பரிசோதனை இன்று நடைபெற இருந்த நிலையில், பரிசோதனை திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. DNA பரிசோதனை செய்ய வேண்டிய மருத்துவ பேராசிரியர் மாற்றுப்பணிக்கு செல்வதால், திங்கட்கிழமை பரிசோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.