இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை

215
Advertisement

https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link

சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்
சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்
குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்
கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்
கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம்.

அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில் உலா வருகிறது. இன்ஸ்டாகிராமில்
பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் மனதை கொள்ளை கொள்ளும் காட்சி
இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோக் காட்சியில் உணவகம் ஒன்றில் ஒரு சிறுவன் தனது
குடும்பத்தினருடன் உயர்ந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.
குறுபோடை போடும் அந்தச் சிறுவன் அருகிலுள்ள மற்றொரு
நாற்காலியில் உட்கார்ந்து செலபோனைப் பார்த்துக்கொண்டிருக்கும்
இளம்பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கத் தொடங்குகிறான்.
பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

அந்த தருணத்தில் செல்போன் பார்ப்பதில் மூழ்கியிருந்த அந்த இளம்பெண்
எதேச்சையாக அந்தச் சிறுவனைப் பார்க்கவும், அச்சிறுவன் மகிழ்ச்சிபொங்க
வாயெல்லாம் புன்னகைக்கிறான்.

சிறுவனின் கள்ளங்கபடமற்ற புன்னகை இளம்பெண்ணை வெட்கப்பட
வைத்துவிட்டது. அப்பெண்ணும் உடனே தன்னை மறந்து ஆனந்தத்தோடு
புன்னகையில் மலர்ந்துவிட்டாள்.

அழகான புன்சிரிப்பால் அழகான இளம்பெண்ணை நாணப்பட வைத்த
சிறுவனின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.