தமிழ்நாட்டை சேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு விருது வழங்கி, மத்திய அரசு கெளரவித்துள்ளது…

29
Advertisement

தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டியூஷன் கிளப்பில், நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. Heros on the road என்ற பெயரில் விருது வழங்கப்பட்டது.

அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்கள் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை விபத்து ஏற்படாமல், தங்களது பணியை மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் விருது வழங்கப்பட்டது