பீகாரில் இந்தாண்டு இறுதிக்குள் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த அமைச்சர் சபை ஒப்புதல் அளித்துள்ளது…!

97
Advertisement

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சர் சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி துறை முன்மொழிந்தது. அதனை அமைச்சர் சபை ஏற்றுக்கொண்டது. அதன்படி, முதன்மை வகுப்புகளுக்கு 85 ஆயிரத்து 477 ஆசிரியர்கள், நடுத்த வகுப்புகளுக்கு ஆயிரத்து 745 ஆசிரியர்கள் மற்றும் உயர் வகுப்புகளுக்கு 90 ஆயிரத்து 804 ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கியது. பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் முழு ஆட்சேர்ப்பு செயல்முறையும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.